பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் கங்கனா ராணாவத் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று  எம்பி ஆகியுள்ளார். தற்போது பாஜக கட்சியின் எம்.பி ஆக இருக்கும் கங்கனா டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் நடிகை கங்கனாவை கன்னத்தில் அறைந்தார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது ஒரு எம்.பிஐ அறைந்த குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் பல வருடங்களாக போராட்டம் நடத்தியது அனைவருக்கும் தெரிந்தது. அப்படி போராட்டம் நடத்திய விவசாயிகள் தனிநாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கானா பேசி வருகிறார். மேலும் இதன் காரணமாகவே கங்கனாவை அந்தப் பெண் காவலர் அடித்ததாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.