உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான ஷைலாராணி ராவத்  தன்னுடைய 68 வயதில் உடல்நலக்குறைவால்  காலமானார். கடந்த சில தினங்களாகேவ  உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

அங்கு வென்டிலேட்டர் உதவியோடு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இதனை தொடர்ந்து, பாஜக தொண்டர்கள்  இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பல கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.