
ராமேஸ்வரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்க உள்ள நடை பயணத்தில் அதிமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடை பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக கலந்து கொள்கிறது. ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடை பயணத்தை நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.