
ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல்லெறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்று நாம் தமிழர் கட்சி இருப்பதாக நான் நினைக்கிறேன். சீமான் பெரியாரைத் தொடர்ந்து விமர்சனம் செய்தால் எதிர்வினை ஆற்ற எங்களால் முடியும். பெரியார் இறந்து 53 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு சீமான் தற்போது அவரைப் பற்றி விமர்சனம் செய்வதன் அவசியம் என்ன?.
சீமான் பெரியார் பற்றி தவறாக பேசி வருகின்றார். பெரியாரின் வரலாறு பற்றி பேசினால் ஏதாவது பதில் சொல்ல முடியும். அதை விட்டுவிட்டு சீமான் பொய் பேசுகின்றார். பாஜக தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு சோற்றுக்காக பெரியாரை அழுக்காக்குகிறார் சீமான். பெரியார் திராவிட இயக்கத்தை முன்வைத்து வழிநடத்தி செல்வதால் திராவிட இயக்கத்தை பாஜக குறி வைக்கின்றது. சீமான் திராவிடத்தையும் தமிழ் தேசியம் குறித்தும் ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.