
திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ராஜசேகர் என்பவர் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த அலுவலகத்தில் இன்ஸ்டாகிராமில் உள்ள பதிவுகளை பார்த்து வந்தார். அப்போது ஒரு வாலிபர் ஐடியில் இருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருப்பதை கவனித்தார்.
அவர் திருச்சியை சேர்ந்த மன்சூர் அலி(26). இவர் வீடியோவில் ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக தலித் ஹூசைன் ஷா என்பவர் இருக்கும் நிலையில் அவரது புகைப்படத்தை குறிப்பிட்டு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அதோடு அவர் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றுகிறார் என்றும் வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பாஜக பிரமுகரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி நாட்டின் இறையாண்மையை கெடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டதால் அவரை கைது செய்யும்படி போலீஸ் ஏட்டு மேல் அதிகாரிகளிடம் கூறினார். மேலும் அந்த தகவலின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.