
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் ஹீரோயினாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடம், வில்லன் என எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தாவாறு நடித்து அசத்துவார். குறிப்பாக வில்லி வேடங்களில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகிறது. இவர் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று அவர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்ட நிலையில் அவர் நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.