பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மற்றும் 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பீகார் துணை முதல்வராகவும் நிதி மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். அது மட்டுமல்லாமல் எம் எல் ஏ, எம் எல் சி மற்றும் எம்பி ஆகவும் பதவி வகித்துள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.