
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் என்ற பகுதி உள்ளது. இந்த மாநகராட்சியின் மேயராக பாஜகவை சேர்ந்த மீனல் சௌபாய் என்பவர் இருக்கிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தான் மேயராக பொறுப்பேற்றார். இவருக்கு மீஹல் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த சனிக்கிழமை பிறந்தநாள். இதனை அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீஹல் மற்றும் அவருடைய நண்பர்கள் நான்கு பேரை கைது செய்தனர். மேலும் இதைத் தொடர்ந்து ஜாமீனில் அனைவரும் வெளியே வந்தனர்.