
இந்தியாவைப் பொறுத்த வரையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களுக்கு தரமான கல்வியை தர வேண்டும் என உறுதி பூண்டுள்ளன. இந்த நிலையில் மேகாலியாவில் அரசு பள்ளி பாட புத்தகங்களில் குறிப்பிட்ட பாடங்களில் க்யூ ஆர் குறியீடுகளை அம்மாநில அரசு கொண்டுவரவுள்ளது.
இதனை ஸ்கேன் செய்து மாணவர்கள் பாடம் குறித்து அதிகப்படியான தகவல்களை பெற முடியும். இதில் வீடியோ வடிவிலான விளக்கங்கள் மற்றும் தீர்வு காணப்பட்ட வினாக்கள் என்று பல அம்சங்கள் உள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.