
சிங்கப்பூரை சேர்ந்த இன்ஸ்ட்டாகிராம் பிரபலம்தான் ஷிர்லி லிங். 34 வயதான இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் பாட்டியாகியிருப்பதாகவும், தன்னுடைய 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கும் இதே வயதில்தான் குழந்தை பிறந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது 8 முதல் 17 வயது வரை மொத்தம் நான்கு குழந்தைகள் ஷிர்லி லிங்கிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தன்னுடைய மகனை திட்டுவதற்கு பதிலாக அவனுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.