கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணிற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நோயாளி ஒருவர் பெண் மருத்துவர் எதிர்பாராத சமயத்தில் பின்னால் ஓடி வந்து அவரது தலை முடியை பிடித்து இழுத்து இரும்பு கட்டிலின் காலில் மோத செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்த நோயாளியிடம் இருந்து பெண் மருத்துவரை மீட்டுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மருத்துவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.