இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவுகளை விட துரித உணவுகளை மக்கள் பெரும்பாலும் நாடுகிறார்கள். இந்த துரித உணவுகளால் ஆபத்துகள் ஏற்படுகிறது. சமீபகாலமாக துரித உணவுகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு நேற்று மாநிலம் முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உத்தரவிட்டது.

இதேபோன்று கர்நாடகாவிலும் பானி பூரி கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் பானி பூரி தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் அதில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அம்மாநிலத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆய்வு முடிவில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.