
சென்னையில் பானி பூரி மற்றும் தெருவோரக்கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது விற்பனை செய்பவருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு பெறுதல் அவசியம் என்று கூறியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பானி பூரி பணியில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.