உத்திரபிரதேச மாநிலம் புலந்த்சஹாரில் புக்ராசி சௌகி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஒரு 80 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் ஒரு 4 வயது தலித் சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை தன் வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக கூறி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ அறிக்கை வந்த பிறகு விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.