
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் நானே கட்சியின் தலைவராகவும் தொடர்வேன் என்றும் அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என்றும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் நான்தான் பாமக கட்சியின் தலைவர் என்று அறிவித்துள்ளார்.
அதன் பிறகு மருத்துவர் ஐயா உதவியோடு அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக 2026 இல் வலிமையான கூட்டணி அமைக்கப்படும் என்றும் நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என்றும் அறிவித்துள்ளார். மேலும் ராமதாஸ் ; ஒப்புதலோடு இந்த அறிக்கையை அன்புமணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாமக தொண்டர்கள் குழம்பக் கூடாது என்பதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த அறிக்கை
மருத்துவர் அய்யா அவர்களுக்கு
புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்!பாட்டாளி சொந்தங்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
(தலைமை நிலைய பதிவு) pic.twitter.com/dMN4XKCenM
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 12, 2025