
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அக்கட்சி துணைப் பொதுச் செயலாளர் செயல்பட்டு வந்த ஆதவ் அர்ஜுனா 6 மாதகாலம் சஸ்பெண்ட் செய்யப்பட நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் அவர் பேசினார். இதன் காரணமாக கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக திருமாவளவன் அவரிடம் ஏதோ ஒரு பெரிய திட்டம் இருப்பது போல் தோன்றுகிறது எனவும் கட்சியில் மீண்டும் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அமைதியாக வேண்டும் எனவும் கூறினார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் தனக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படுவதை விரும்பவில்லை எனவும் கனத்த இதயத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நிரந்தரமாக விலகுகிறேன் எனவும் அறிவித்தார்.
இவர் அடுத்ததாக தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் அப்படி இணைந்தால் தமிழக வெற்றி கழகத்தின் ஐடி விங் முழுமையாக அவரிடம் செல்லும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் விஜய் அவருக்கு பொருளாளர் பதவியை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆதவ் அர்ஜுனா பாமக கட்சியில் இணைய போவதாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். இது தொடர்பாக அந்த கட்சியின் முக்கிய முக்கிய நிர்வாகி ஜிகே மணி கூறும் போது, ஒருவேளை ஆதவ் பாமக கட்சியில் இணைய விரும்பினால் அது பற்றி நாங்கள் பரிசீலனை செய்வோம் என கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக அடுத்ததாக அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.