
சேலம் மாவட்டம் பெரிய காடாம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் இவர் சுற்று வட்டார பகுதிகளில் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இதுவரை சிவப்பிரகாசம் 3500 பாம்புகளை பிரித்துள்ளார்.
ஒரு மரக்கடையில் கண்ணாடிவிரியன் பாம்பு புகுந்து விட்டதாக சிவப்பிரகாசத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சிவப்பிரகாசம் அங்கு சென்று பாம்பை பிடித்தார். அப்போது பாம்பு அவரை கடித்தது.
உடனடியாக சிவப்பிரகாசம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னால் மேல் சிகிச்சைக்காக சிவப்பிரகாசம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது ஆம்புலன்ஸில் பாம்புடன் தான் வருவேன் என சிவப்பிரகாசம் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த பாம்பை மீட்டு காட்டுப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதற்கிடையே சிவப்பிரகாசமும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.