மனிதனை 20 நிமிடங்களில் கொல்லக்கூடிய அதிக விஷத்தன்மை கொண்ட ஆக்டோபஸின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறிய கடல் வாழ் உயிரினம் 26 நபர்களை கொல்லக் கூடிய கொடிய விஷத்தன்மையை கொண்டுள்ளது. இது நீல வளையம் கொண்ட கொடிய விஷம் நிறைந்த ஆக்டோபஸ். ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஒரு மனிதனை இதனால் 20 நிமிடங்களில் கொன்று விட முடியும். தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் இருக்கும் ஸ்ரீ அக்டோபஸ் நீல நிற வளையத்தில் உமிழ்நீர் சுரப்பியில் உள்ள சிம்பியோடிக் பாக்டீரியா  டெட்ரோடோடாக்ஸின் என்ற நச்சை உற்பத்தி செய்கின்றது.

இது மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து நரம்பு தூண்டுதலை தடுக்கும். இதனால் தசைகள் சுருங்குவது நின்று போய் உடனடி மரணத்தை ஏற்படுத்தும். இந்த விஷக்கடிப்பட்ட நபர்கள் வாந்தி மற்றும் மயக்கம் ஆகியவற்றை அனுபவிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அவர்களால் அசைய கூட முடியாது. அதன் பிறகு சுவாச கோளாறு ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும். இவை அனைத்தும் தொற்று பாதித்த சில நிமிடங்களில் நடைபெறும்.