
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரை சேர்ந்த ஹேமந்த் என்பவர் தனது கழுத்தில் மலைப்பாம்பை போட்டபடி மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் மலை பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹேமந்த் வந்துள்ளார். ஆனால் இம்முறை பாம்பு ஹேமந்தின் கழுத்தை கடுமையாக இறுக்கியுள்ளது.
இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடிய ஹேமந்தை அக்கம் பக்கத்தினர் பாம்பிடம் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியாமல் பாம்பு கழுத்தை இறுக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹேமந்தின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு பாம்பையும் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.