கோவாவில் உள்ள ஹெலங்கெடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் 21 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இதில் 54 வயது வயதுடைய நபர் மட்டும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அதிக பாரம் காரணமாகத்தான் படகு கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த நபர் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது.