
தமிழ் சினிமாவில் ‘ஜெமினி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண். இந்த படத்தை தொடர்ந்து ‘வில்லன்’, ‘வின்னர்’, ‘அன்பே சிவம்’, ‘நியூ’, ‘முத்தின கத்திரிக்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது மும்பை சென்றுள்ள அவர் பிரபலமான ஆலிவர் பாரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது