பிரான்சின் தலைநகர் பாரீஸில் இன்று (ஆகஸ்ட் 28) மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்குகின்றன. 11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

 

இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். பார்வையற்றோர் கால்பந்து, பவுலிங், சர்வதேச சக்கர நாற்காலி பந்தயம், ஜூடோ, பவர்லிப்டிங், நீச்சல், ஷூட்டிங், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பார்வையற்றோர் கோல்பால், குஸ்தி மற்றும் வில்வித்தை என பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

 

இந்திய வீரர்கள் இதற்கு முன்னர் பல்வேறு பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்று இந்தியாவின் பெயரை உலகளவில் கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த முறையும் இந்திய வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.