பாரிஸ்  ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். முதல் முறையாக தனிநபர் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தங்கம் வென்றவுடன் தாய்நாட்டு கொடியுடன் திடீரென கதறி அழுதார்.

அவர் பாகிஸ்தான் நாட்டின் கொடியை உடலில் சுற்றிக்கொண்டு வலம் வந்தார். பின்னர் தன் பயிற்சியாளரை கட்டியணைத்து திடீரென அழ ஆரம்பித்துவிட்டார். அவர் தங்கப்பதக்கம் என்ற மகிழ்ச்சியில் கதறி அழுதார். இவருடைய வெற்றிக்கு இந்திய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.