உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் போட்டி தற்போது பிரான்ஸின் தலைநகரமான பார்சிலில் நடைபெற உள்ளது. இங்கு வருகிற ஜூலை 26 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த போட்டியின் பாதுகாப்புக்காக தினமும் 30 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். இதன் தொடக்க விழாவில் 45 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

அதோடு 18 ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் 10 பயிற்சி பெற்ற  மோப்ப நாய்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. இந்தியா பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தத்தை அடிப்படையாக இந்த பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. மேலும் இந்த மோப்ப நாய்கள் பெல்ஜியம் மாலினோஸ் இனத்தைச் சேர்ந்தவை ஆகும். அதனால் சந்தேகத்திற்குரிய மனிதர்கள் மற்றும் குண்டுகளை கண்டுபிடிப்பதில் இது சிறப்பாக செயல்படும்.