உத்திரபிரதேசத்தில் உள்ள விருந்தாவன் என்னும் நகரத்தில் விதவைகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கெட்ட சகுனம், சூனியம் செய்பவர்கள் என்றும் அவர்களை அந்த நகரத்து மக்கள் வெறுத்து ஒதுக்குவதாக கூறப்படுகிறது. அங்குள்ள விதவைகளுக்கு சொத்துரிமை என்பது இருந்தாலும் அது முற்றிலுமாக மறுக்கப்படுகிறது .

இருப்பினும் இவர்களுக்கு பலரும் சட்ட உதவிகள்  புரிந்து வருகிறார்கள். வாழ்க்கைத்துணையை இழந்து தனிமையும், ஒதுக்கப்படுதலும் இங்கு பல விதவைப் பெண்களுக்கு நடக்கிறது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.