சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு நபர் மிகப் பெரிய ராஜ நாகத்தை நேரடியாக கை வைத்து பார்வையாளர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் தாக்கும் போக்குடன் காட்சியளித்த அந்த பாம்பு, சிறிது நேரத்திலேயே அமைதியாகி, அந்த நபர் பாம்பின் தலையை தனது தலையால் மெதுவாக தொடுவதற்கும் அனுமதிக்கிறது. இந்த அபூர்வமான மனிதர்–பாம்பு ஒத்துழைப்பு, மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவை ‘Panji Petualang’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்ததிலிருந்து, தற்போது வரை 69 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் மூன்று மில்லியனுக்கும் மேலான தொடர்புகள் பதிவாகியுள்ளன.

 

 

இந்த வீடியோவுக்கான விமர்சனங்கள் இருமுகமாக உள்ளன. சிலர் அந்த நபரின் தைரியத்தையும் “நல்ல அதிர்வுகளை”ப் பரப்பும் ஆற்றலையும் புகழ்ந்திருக்கிறார்கள். “பாம்பும் அவனை நம்புவது போலிருக்கிறது” என ஒருவர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “அவர் மிகுந்த பயிற்சி பெற்றவர் அல்லது மிகுந்த அதிர்ஷ்டசாலி. ஒரு தவறான செயலால் உயிரிழக்க நேரிடலாம்” என எச்சரித்துள்ளார். அதேசமயம், சிலர் பாம்பின் பல்லுகள் அகற்றப்பட்டிருக்கக்கூடுமா என்ற சந்தேகங்களையும் எழுப்பினர். “பாம்புகள் செல்லப் பிராணிகள் அல்ல – இதுபோன்ற விஷப் பாம்புகளுடன் உயிரை ஆபத்தில் வைக்கும் செயலை  யாராவது செய்வார்களா?” என ஒருவர் விமர்சித்துள்ளார். இது போன்ற வீடியோக்கள், இயற்கையை மதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தவிர, உயிரை சூதாட்டமாக ஆக்கும் முயற்சி என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.