இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. தற்போது அனைவரின் கைகளில் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் வினோதமாக மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் நடந்தாலும் உடனே வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட அதுவோ மிகவும் வைரல் ஆகி விடுகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகளைப் பற்றிய வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம்.

 

அந்த வகையில் தற்போது ஒரு பெண் அசால்டாக குழந்தையை குளிப்பாட்டுவது போன்று ஒரு பாத்திரத்தில் வைத்து பாம்புகளை குளிப்பாட்டுகிறார். அந்த பாம்புகளுக்கு விஷத்தன்மை இருக்கிறதா இல்லையா என்பது சரிவர தெரியவில்லை. அந்தப் பெண்ணை சுற்றி பல பாம்புகள் இருக்கிறது. அந்தப் பெண் ஒவ்வொரு பாம்புகளையும் வெறும் கையால் எடுத்து பின்னர் பாத்திரத்தில் போட்டு குளிப்பாட்டுகிறார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.