அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ட்ரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சென்று ட்ரம்ப் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் அரசியலில் எதிரிகளாக இருக்கும் நிலையில் தற்போது இவர்கள் பற்றிய ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதாவது இவர்கள் இருவரும் நண்பர்களாக மாறி விடுமுறையை கொண்டாடினால் எப்படி இருக்கும் என்பது குறித்து ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட நிலையில், பின்னர் விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என்று யோசிக்கிறார்கள். அவர்கள் இருவரும் பைக்கில் ஜாலியாக சுற்றி ஐஸ்கிரீம் சாப்பிடுவது, குதிரை சவாரி செய்தல் மற்றும் பாட்டு பாடுவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்கள். மேலும் இந்த வீடியோ வெளியாகி ஒருநாள் கூட ஆகாத நிலையில் 60 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.