பார்வைத் திறன்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் விதமாக சீனாவைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று நாய் வடிவில் ரோபோ வழிகாட்டியை உருவாக்கியுள்ளது. உயர்-தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ நாய்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிக்னல்களில் வழிநடத்தவும், அடையாளம் காணவும் உதவும்.

இந்த ரோபோ  வழிகாட்டி நாய்கள் 90% குரல்களை அறிதலில் துல்லியத்தைக் கொண்டுள்ளதால், ஒரே ஒரு நொடிக்குள் பயனர்களின் கட்டளைகளைப் புரிந்துகொண்டு அதற்கு துல்லியமாக பதிலளிக்கிறது.