
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என நேற்று மாணவர்கள் அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில் அது கலவரத்தில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று மேற்கு வங்கத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது பாலியல் குற்றவாளிகளுக்கு இனி மரண தண்டனை வழங்கப்படும் எனவும் அவர்களுடைய தண்டனை 10 நாட்களில் உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பான புதிய சட்ட மசோதா அடுத்த வாரம் கூடும் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி கொடுத்துள்ளார். மேலும் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற உறுதி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.