தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக தமிழில் ரகு தாத்தா படத்தில் நடித்தார். மேலும் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். பேபி ஜான் தெறி திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கிளாமராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு திருமணம் ஆன நிலையில் எந்த படத்திலும் அவர் கமிட்டாகாமல் இருந்தார். தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள வரலாற்று கதையான ‘அக்கா’ என்ற வெப் சீரிஸில் நடித்து இருகிறார்.அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியில் ரொமான்டிக் காமெடி படம் ஒன்றில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷிடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது.