பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் சினிமா பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர். இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ராஹா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நடிகையாக இருக்கும் ஆலியா குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு பல கோடி ரூபாய் சம்பளம் பெரும் ஆலியா பட் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. ஆம் அது உண்மைதான்.

அதாவது பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை. அவர் கரன் ஜோகர் இயக்கிய படத்தின் மூலம் முதல்முறையாக அறிமுகமான நிலையில் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் முன்னணி நடிகையாக இன்று ஜொலிக்கிறார். இவருக்கு விலை உயர்ந்த வீடுகள், ஆடம்பர கார்கள் இருக்கும் நிலையில் பல தொழில்களையும் நடத்தி வருகிறார். மேலும் இன்று திரையுலகில் மட்டும் இன்றி ஒரு தொழிலதிபராகவும் ஜொலிக்கும் ஆலியா பட் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் என்பது சற்று ஆச்சரியமான ஒரு விஷயம் தான்.