
ராஜஸ்தான் ராயல் சனியின் இந்திய வீரர் ரியான் பராக் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடிய லைவ் ஸ்டிரீம் ஸ்க்ரீன் ஷாட்கள் வெளியாகி உள்ள நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று யூடியூபில் நேரடி ஸ்ட்ரீம் மூலமாக பேசிக் கொண்டிருந்தபோது தனது திரையை மறைக்க மறந்து விட்டார்.
இதன் விளைவாக அவருடைய யூடியூப் தேடல் வரலாறு வெளிப்படையாக கசிந்துள்ளது. அதில் பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை தேடியது தெரியவந்துள்ளது. இது குறித்த ஸ்கிரீன் ஷாட்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.