
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக, ‘நிச்சு மங்களூரு’ என்ற பெயரில் இயங்கும் பயனர்மீது கர்நாடகாவின் மங்களூரு நகரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தட்சிணக் கன்னட மாவட்டம் மங்களூரு மாநகரில் உள்ள கோனாஜே காவல் நிலையத்தில் உள்ளூர் குடியிருப்பாளரான சதீஷ் குமார் என்பவர் புகார் அளித்ததையடுத்து, 2023 ஆம் ஆண்டு இயற்கை சட்டமான பாரதீய ந்யாய சஞ்சிதை (BNS) சட்டப்பிரிவுகள் 192 மற்றும் 353(1)(b) ஆகியவற்றின் கீழ் எப்போதும் கலவரத்தை தூண்டக்கூடிய வகையில் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் பதிவு செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை தரவுகளின்படி, அந்தப் பதிவில், 2023-ம் ஆண்டு பால்கர் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரால் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டும் தற்போதைய பஹல்காம் தாக்குதலும் ஒப்பிட்டு, மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் தீவிரவாத ஆதரவு போன்ற கருத்துகள் இடப்பட்டுள்ளன.
அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு ரயில்வே அதிகாரி சக ஊழியர் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்றார். அவர் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பாக நீங்கள் முஸ்லிம்களாக என்று கேட்டதாக அந்த பயனர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
“பால்கர் சம்பவ பயங்கரவாதியை பொது இடத்தில தூக்கில் போட்டிருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது” எனக் கூறியிருப்பதும், சமுதாயம் இடையே சச்சரவுகளை உருவாக்கும் முயற்சி எனக் கருதப்படுகிறது. மேலும் இவரின் பதிவை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் போலீசார் அவரின் புகைப்படத்தை வைத்து தற்போது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.