
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா ஜூன் ஏழாம் தேதியான இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் கலால் வரி 20 சதவீதம் அதிகரிக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் பீர் மீதான கூடுதல் கலால் வரியும் 175-லிருந்து 185 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் பாலுக்கான வரியை 20 சதவீதம் கர்நாடக அரசு உயர்த்தி உள்ளது.