இன்றைய காலகட்டத்தில் சமுக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒருவர் ஒரு எலக்ட்ரானிக் பாம்பை ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்கிறார். அந்த இடம் பார்ப்பதற்கு ஒரு கடற்கரை போன்று இருக்கும் நிலையில் அங்கு ஒருவர் கூடாரம் அமைத்து படுத்திருந்தார்.

அந்த கூடாரத்திற்குள் ஒருவர் பாம்பை கண்ட்ரோல் செய்து அனுப்பிய நிலையில் அவர் உண்மையாகவே பாம்பு தான் வந்துவிட்டது என நினைத்து கூடாரத்தோடு கவிழ்ந்து கவிழ்ந்து விழுகிறார். பின்னர் ஒரு நிமிடம் யோசித்த அவர் அங்கிருந்து எழுந்து ஓடிவிட்டார். பின்னர் இந்த வீடியோவை எடுத்துக் கொண்டிருந்தவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். மேலும் போலியான பாம்பை உண்மையென நம்பி அவர் தலைதெறிக்க ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.