கனடாவின் கால்கரி நகரத்தில் அமைந்துள்ள போவாலி கல்லூரி ரயில் நிலையத்தில், ஒரு இளம் பெண்ணை அதிரடியாக தள்ளி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், நீல ஜாக்கெட் மற்றும் இருண்ட சாம்பல் நிற பேண்ட் அணிந்த ஒருவன், கருப்பு உடை அணிந்து பை வைத்திருந்த ஒரு பெண்ணின் கழுத்தை நெரிக்க முயற்சித்து தாக்குவதை காணலாம். தாக்கப்பட்ட பெண் இந்திய மாணவியாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தின் போது அருகிலிருந்த பிற பயணிகள் எவரும் உதவ முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலை நடத்திய நபர் யார் என்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்குப் பின்னாலுள்ள காரணம் இன்னும் தெரியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் கனடாவில் உள்ள சறீ நகரில், ஹரியானாவின் குருக்ஷேத்திராவைச் சேர்ந்த 23 வயது இந்திய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவமும், கனடாவில் வாழும் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணம் என்ன என்ற கேள்விகளை எழுப்புகிறது.