உலக கோப்பை 2023 தொடரில் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற முடியாமல் போனது. இதனால் கோப்பையும் வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், இந்திய அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டது. பாவிகள் பங்கெடுத்துக் கொண்ட ஒரு போட்டியைத் தவிர என கூறியுள்ளார். மேலும் கொல்கத்தா அல்லது மும்பையில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெற்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.