நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் தகுதியற்ற பயனாளர்களின் பெயர் நீக்கப்பட்டு வருகிறது. பி எம் கே சாங் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்காதது அல்லது அவர்களின் கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கப்படாத ஆகிய காரணங்களால் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பி எம் கிசான் திட்டத்தில் பெயர் நீக்கப்பட்ட பயனாளிகள் விரைவில் தங்களின் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயனாளிகளின் கணக்கு விவரங்கள் தவறாக இருந்தாலும் ஆதார் சரி பார்த்து முடிக்கப்படாமல் இருந்தாலும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படாது எனவும் விதிகளை பின்பற்றாத விவசாயிகளுக்கு இந்த திட்டத்தில் உதவி கிடைக்காது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.