
பிக் பாஸ் சீசன் 7 லிருந்து முதல் போட்டியாளராக அனன்யா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில் பாவா செல்லத்துரை நேற்றைய தினம் வெளியேறிவிட்டார். அதனை அடுத்து வைல்டு கார்டு எண்ட்ரியாக யார் உள்ளே வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக நாஞ்சில் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பிக் பாஸில் இருந்து பரிசு ஒன்று வந்துள்ளதையும் அதனைப் பிரித்து என்னவென்று பார்ப்பதையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த பார்சல் உள்ளே என்ன இருந்தது என்று அவர் காட்டவில்லை. இதனால் நாஞ்சில் விஜய் பிக் பாஸ் உள்ளே வருகிறார் என்று ரசிகர்கள்யூகித்துள்ளார்கள். மேலும் தற்போது தான் திருமணம் நடைபெற்ற நிலையில் உள்ளே வருவாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
View this post on Instagram