
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்தது பிரபலமானவர் பவானி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அமீர் மீது காதல் வயப்பட்டார். இதில் ஏற்கனவே பவானிக்கு கடந்த 2017 ம் ஆண்டு சீரியல் நடிகர் பிரதீப் குமார் என்பவருடன் திருமணமான நிலையில் அவருடைய கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இது பவானிக்கு இரண்டாம் திருமணம். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்து அமீரின் காதலை பவானி ஏற்றுக்கொண்ட நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துள்ளனர்.
View this post on Instagram
இவர்கள் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் அமீர் மற்றும் பவானிக்கு தற்போது கோலாகலமாக திருமண நடைபெற்ற நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஜோடிக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.