
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்தும் இன்னும் பிரபலங்கள் சிலர் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் முத்துக்குமரன் டைட்டிலை தட்டிச் சென்றார். சௌந்தர்யா ரன்னராக பட்டத்தை பெற்றார். என்னதான் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒன்னும் மண்ணுமாக சுற்றினாலும் கடைசியில் வெளியே வந்த பிறகு யாருடன் ஒன்றாக சுற்றினார்களோ அவர்களையே வெளியில் வந்து திட்டுவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு சண்டைதான் முத்துக்குமரனுக்கும், சௌந்தர்யாவிற்கும் இடையே நடந்து வருகிறது.
முத்துக்குமாரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சில பேட்டிகளில் கலந்து வருகிறார். அதில், சௌந்தர்யா குறித்த உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது ஒரு மாதிரியும், வெளியில் வந்த பின்பு ஒரு மாதிரியும் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லாத ஆள்தான். ஆனால் என்னுடைய கருத்தும் வேறுபாடு உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சௌந்தர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் போட்ட பதிவில்,” பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதம் ஆகிறது. ஆனாலும் இன்னும் சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ஒருவேளை இவர் முத்துக்குமார் தான் கூறியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இத்தனை நாட்கள் ஆன நிலையில் இவர்கள் இருவரும் இப்படி அடித்துக் கொள்வது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.