விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில்  6 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.

இதுவரை ஒளிபரப்பான 6 சீசன்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். இதனிடையே, உலக நாயகன் கமல் ஹாசன் இந்த சீசனுக்காக ரூ.130 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. கடந்த சீசனை காட்டிலும் இந்த 7-வது சீசனில் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது