விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி மங்கம்மாள். இவள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் நந்தகுமார் என்பவர் மங்கம்மாளை பட்டாசு தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால் மங்கம்மாள் பலரிடம் கடன் வாங்கி 5 லட்சம் ரூபாய் பணத்தை நந்தகுமாரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் நந்தகுமார் தொழிலில் பங்குதாரராக சேர்க்காததோடு, பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மங்கம்மாள் தனது தாய் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.