தமிழ் சினிமா பின்னணி பாடகி உமாரமணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா மற்றும் வித்யாசாகர் உள்ளிட்டோரின் இசையில் எஸ்பிபி, யேசுதாஸ் உள்ளிட்ட பலருடன் இணைந்து பின்னணி பாடல் பாடியவர். குறிப்பாக நிழல்கள், தில்லு முல்லு, வைதேகி காத்திருந்தாள் மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.