
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு இந்த மாதத்திற்கான உதவித்தொகை பிப்ரவரி 7ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.