
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் பிரசவத்தில் உயிரிழந்து விட்டதாக எண்ணி உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்து பெண்ணின் சடலத்தை தகனம் செய்தனர். அ
தன்பின் சாம்பலை கரைப்பதற்காக அவர்கள் தகனம் செய்த இடத்திலிருந்து சாம்பலை சேகரித்தனர். அப்போது கத்தி ஒன்று கிடைத்தது. அதாவது அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தி கிடைத்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதாவது ஆபரேஷன் செய்யும் போது வயிற்றில் தவறுதலாக மருத்துவர்கள் கத்தியை வைத்ததால் தான் அந்த பெண் உயிரிழந்ததாகவும் தற்போது தகனம் செய்த போது கத்தி வெளியே வந்து விட்டதாகவும் புகாரில் கூறியுள்ளனர். மேலும் அந்த மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.