
ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சேகரின் கள்ளக்காதலி அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் நேற்று முன்தினம் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.