புனேவில் உள்ள பிரபல தினநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனிஷா சுஷாந்த் பிஸே என்ற பெண், பிரசவ வலியால் அவதிப்பட்டு இந்த மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ₹10 லட்சம் கட்டணம் முன்பே செலுத்துமாறு வற்புறுத்தியது. இவரது குடும்பம் ₹2.5 லட்சம் உடனே செலுத்தத் தயாராக இருந்தபோதிலும், மருத்துவமனை அனுமதிக்க மறுத்தது.

இதனால், தனிஷாவை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, உடல்நிலை மோசமடைந்தது. இதனால் பிரசவ வலி அதிகமாகி அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் அந்தப் பெண் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் தனிஷாவின் கணவர் சுஷாந்த் பிஷே பாஜக எம்எல்ஏ அமித் கோர்கேவின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றி வரும் நிலையில் உடனடியாக அவர் எம்எல்ஏவுக்கு தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்.

 

இதைத்தொடர்ந்து அவர் நேரடியாக மகாராஷ்டிரா முதல்வருக்கே புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆம்புலன்ஸில் தனிஷாவை அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.