தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஒன்றாக திருத்தணி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் நிலையில் சிறப்பு பூஜை மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் காணப்படும்.

`

இந்நிலையில் ஆடி கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி தரிசன டிக்கெட் கட்டணம் ரூ‌.200 ஆக இருந்தது. இந்த கட்டணத்தை தற்போது குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ‌.200-ல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார். மேலும் திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் 5 நாட்களுக்கு ஆடி கிருத்திகை விழா நடைபெறும் நிலையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் திருப்படி திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.